Skip to main content

முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: ஹர்ஷா – எரான்

Aug 20, 2020 289 views Posted By : YarlSri TV
Image

முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: ஹர்ஷா – எரான் 

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் என்றவகையில் நிறைவேற்றதிகாரத்தின் செயற்பாடுகள் மற்றும் வகைகூறலை உறுதி செய்யும் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதுடன், நாட்டின் அபிவிருத்தியை முன்நிறுத்திய நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.



2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் ஊடாகத் தெரிவான புதிய பாராளுமன்றம் உரிய சம்பிரதாய நிகழ்வுகளுடன் முதலாவதாக இன்று வியாழக்கிழமை கூடியது. இந்நிலையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன ஆகியோர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.



ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான தேசியபட்டியல் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, தான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருக்கும் தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகூற விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.



அதேவேளை நாம் நிறைவேற்றதிகாரத்தின் செயற்பாடுகள் மற்றும் வகைகூறலை உறுதி செய்யும் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதுடன் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குவோம் என்று உறுதியளித்திருக்கிறார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை