Skip to main content

ஏன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறீர்கள் - இல.கணேசன் கேள்வி

Aug 20, 2020 262 views Posted By : YarlSri TV
Image

ஏன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறீர்கள் - இல.கணேசன் கேள்வி 

குடிகாரர்களே கட்டுப்பாட்டோடு மதுக்கடைக்கு சென்று வருவார்கள் என நினைக்கும் அரசு பக்தர்கள் கட்டுப்பாட்டை மீறிவார்கள் என ஏன் நினைக்கிறது என புரியவில்லை எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்த விஷயத்தில் நான் தமிழக அரசுக்கு எதிரானவன் என்றார்.



மேலும் கூறுகையில், இந்து முன்னணி வெற்றிகரமாக 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது.



குறிப்பாக விநாயகர் சதுர்த்தியில் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால்... (பொதுவாக நான் பிரித்துப் பார்ப்பதில்லை நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்) பெரும்பாலும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரே அதிகளவில் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.



விநாயகர் சதுர்த்தியின்போது சிலை வழிபாட்டிற்கு ஏதேனும் கட்டுப்பாடு விதியுங்கள். அதை நாங்கள் பின்பற்றுகிறோம். என்ன கட்டுப்பாடு இருந்தாலும் சரி அதைப் பின்பற்றுகிறோம். ஆனால் விநாயகரே வைக்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்பது இந்து முன்னணியின் வாதம்.



என்னைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வாருங்கள் அதை இந்து முன்னணி பின்பற்றும். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் நாள் இருக்கிறது.



முதலமைச்சருக்கு என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் தேர்தலுக்கும் விநாயகர் சக்திக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விநாயகரை வழிபடக் கூடிய எவருமே விநாயகருக்கு எதிராக இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை.



ஆனால் அநாவசியமாக ஏன் தன் வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதுதான் முதலமைச்சர்கள் பார்த்து நான் கேட்க கூடிய கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை