Skip to main content

சேதனப் பசளையின் பயன்பாட்டை யாழ் மாவட்டத்தில் அதிகரிப்புக்குரிய வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்தார்!

Aug 20, 2020 295 views Posted By : YarlSri TV
Image

சேதனப் பசளையின் பயன்பாட்டை யாழ் மாவட்டத்தில் அதிகரிப்புக்குரிய வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்தார்! 

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இடம்பெற்றது கோராணா தாக்கத்துக்கு பின்னர் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளுடைய பாதிப்புகள் தொடர்பில் விவசாய சம்மேளத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள்



உரப் பாவணை  அதனுடைய தாக்கம் அல்லது அதனுடைய பாவணை முறை தொடர்பில் இன்றைய கூட்டத்தில்  ஆராய்ந்திருந்தோம் சேதனப் பசளையினுடைய பயன்பாடுமிகவும் குறைவாக இருப்பதாகவும் அசேதனப் பசளையின்  பயன்பாடு மிகவும் அதிகமாக காணப்படுகின்றன இங்கே கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 



ஆகவே இந்த சேதனப் பசளை உற்பத்தி செய்யும்  நிலையங்கள் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளன அவற்றினுடைய செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் இன்றையதினம் விரிவாக ஆராய்ந்திருந்தோம்  வேலணைபிரதேச செயலர் பிரிவில் உள்ள சேதனப் பசளை தயாரிக்கும் இடம் செயற்பாடு இல்லாத நிலு காணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டது இனிவரும் காலங்களில் வேலணை பிரதேச பிரிவில் இருக்கின்ற சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை சரியாக  செயற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் தொடர்பில் புதிய தரப்பினருடன்  கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது. 



அதேபோல் சில பிரதேச செயலர் பிரிவுகளில் சேதனப் பசளை யினுடைய பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படும் குறிப்பாக புத்தூர் சாவகச்சேரி  கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இந்த சேதனப் பசளை பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது 



அதேவேளையில் அசேதனப் பசளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகல்  பிரஸ்தாபிக்கப்பட்டது அது தொடர்பில்பல்வேறுபட்ட முறைப்பாடு கிடைக்கப் பெறுவதால் இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது அதாவது அதிகரித்த விலையிலேய தனியார் கடைகளில் இந்த உரம் பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதாக தெரியப்படுத்தப்பட்டது. 



எ விலை கட்டுப்பாட்டு பிரிவினர் மூலம் இதனை கட்டுப்படுத்தி மக்களுக்கு சரியான விலையை உறுதிப்படுத்திவிற்பனை செய்யக்கூடிய நிலைமையினை ஏற்படுத்துவதாகவும் கூட்டத்தில் தீர்மானித்திருந்தோம் என்றார்



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை