Skip to main content

மன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை டேரன் சேமி கைவிட்டார்.

Jun 13, 2020 260 views Posted By : YarlSri TV
Image

மன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை டேரன் சேமி கைவிட்டார். 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது சில வீரர்கள் என்னை ‘கலு’ என்று அழைத்தார்கள். அப்படி அழைக்கும் போது சிலர் சிரிப்பதும் உண்டு.அந்த சமயத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது இனரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் அந்த வார்த்தை சொல்லப்பட்டதாக நான் அறிகிறேன். எந்த நோக்கில் அவ்வாறு என்னை அழைத்தார்கள் என்பதை அந்த நபர்களிடமே கேட்க விரும்புகிறேன். எனவே அப்படி என்னை அழைத்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும். அவர்கள் தவறான எண்ணத்தில் பேசி இருந்தால் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்‘ என்று ஆதங்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சம்பந்தபட்ட வீரர் ஒருவர் டேரன் சேமியுடன் பேசியதை அடுத்து அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். இது குறித்து டேரன் சேமி தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு வீரர் என்னுடன் மனம் விட்டு பேசினார். அந்த விவாதம் சிறப்பானதாக அமைந்தது. அந்த சகோதரர் பாசத்தின் காரணமாகவே அதுபோல் என்னை அழைத்ததாக உறுதிபட கூறினார். அதனை நானும் நம்புகிறேன். இதனால் இந்த விஷயத்தில் இனிமேல் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. நடந்த எதிர்மறையான விஷயங்களில் கவனத்தை செலுத்துவதை விடுத்து, இதனை ஒரு பாடமாக நினைத்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை