Skip to main content

டெங்கு, எலி காய்ச்சலும் பரவுகிறது!

Aug 11, 2020 270 views Posted By : YarlSri TV
Image

டெங்கு, எலி காய்ச்சலும் பரவுகிறது! 

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுடன் டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கேரளாவில் இன்று(ஆக.,11) புதிதாக 1,417 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



இன்று மட்டும் 1,426 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.



இதுவரை 24,046 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 5 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 120 ஆக அதிகரித்துள்ளது.கேரளாவில் 1,49,707 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.



இவர்களில் 1,37,586 பேர் வீடுகளிலும், 12,121 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.



கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு நடுவே, டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



இடுக்கி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 3 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.



இதனையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை