Skip to main content

பந்தை எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பது பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Jun 11, 2020 287 views Posted By : YarlSri TV
Image

பந்தை எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பது பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

பந்தை எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பது குறித்து வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.ஊரடங்கு காலத்தின் போது வீரர், வீராங்கனைகளிடம் ஊக்கமருந்து பரிசோதனையை நடத்த அவர்கள் தாங்கள் எங்கும் இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே தகவல் தெரிவித்து, தங்களது மாதிரிகளை வழங்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறிய 25 வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இந்த விதிமுறையை மூன்று முறை மீறினால் 4 ஆண்டு வரை தடை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்தில் உள்ளூர் லீக் போட்டிகளில் தான் விளையாடிய காலத்தில் இரண்டு தென்ஆப்பிரிக்க வீரர்கள் தன்னை இனவெறியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி அடிக்கடி அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பது பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது பந்து வீச்சாளர்களை ‘ரோபோக்கள்’ போன்று மாற்றி விடும். வருவார்கள், ‘ஸ்விங்’ இல்லாமல் பந்து வீசுவார்கள் அவ்வளவு தான். இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். எச்சிலை பயன்படுத்தாமல் பந்து வீச்சின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம்’ என்றார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை