Skip to main content

3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல்

Jun 06, 2020 356 views Posted By : YarlSri TV
Image

3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல் 

கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் காணொலிக்காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன. ஊரடங்கு நிபந்தனைகள் ஓரளவு தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வழக்குகளும்காணொலிக்காட்சிமூலம்விசாரணைக்குஎடுத்துகொள்ளப்பட்டன.இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல் வெளியாகின. சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் பணியாற்றும் துணைப்பதிவாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் என்று ஐகோர்ட்டு நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் தலைமையில் மற்றொரு டிவிசன் பெஞ்ச் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த 2 அமர்வுகளும் டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் அழைத்து வழக்குகளையும் விசாரிக்கும். அதே போன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அமர்வுகள் அமைக்கப்பட்டு உள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை