Skip to main content

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது

Jun 04, 2020 290 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது 

இந்தியாவில் முன்னர்  இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 72 ஆயிரத்து 300 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் 22,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தில் 17,617, ராஜஸ்தான் 9,373, மத்தியபிரதேசத்தில் 8,420, உத்தரபிரதேசத்தில் 8,361, மேற்குவங்காளத்தில் 6,168, பீகாரில் 4,155, ஆந்திராவில் 3,898, கர்நாடகாவில் 3,796, தெலுங்கானாவில் 2,891, ஜம்மு காஷ்மீரில் 2,718, அரியானாவில் 2,652, பஞ்சாபில் 2,342, ஒடிசாவில் 2,245, அசாமில் 1,513, கேரளாவில் 1,412, உத்தரகாண்டில் 1,043 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.ஜார்கண்டில் 712, சத்தீஸ்காரில் 564, திரிபுராவில் 468, இமாசலபிரதேசத்தில் 345, சண்டிகாரில் 301, மணிப்பூரில் 89, புதுச்சேரி 82, லடாக் 81, கோவாவில் 79, நாகாலாந்தில் 49, அந்தமான் நிகோபர் தீவில் 33, மேகாலயாவில் 27, அருணாசலபிரதேசத்தில் 22, மிசோரத்தில் 13, தாதர்நகர் ஹவேலியில் 4, சிக்கிமில் ஒருவரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.கொரோனா புதிதாக 217 பேரின் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,465 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். குஜராத்தில் 1,092 பேரும், டெல்லியில் 556 பேரும், மத்திய பிரதேசத்தில் 364 பேரும், மேற்குவங்காளத்தில் 335 பேரும், உத்தரபிரதேசத்தில் 222 பேரும், தமிழகத்தில் 208 பேரும், ராஜஸ்தானில் 203 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.தெலுங்கானாவில் 92, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 12, பீகாரில் 24, ஜம்மு காஷ்மீரில் 23, கேரளாவில் 11, ஒடிசா மற்றும் உத்தரகாண்டில் தலா 7, ஜார்கண்ட், இமாசலபிரதேசம் மற்றும் சண்டிகாரில் தலா 5, சத்தீஸ்கார், லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,07,615 பேரில், 1 லட்சத்து 302 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1,01,497 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை