Skip to main content

5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.

May 30, 2020 421 views Posted By : YarlSri TV
Image

5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது. 

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கும் திறன் கொண்ட 5ஜி எக்சைனோஸ் பிராசஸரை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 பிராசஸர் ஃபிளாக்ஷிப் ரக எக்சைனோஸ் 980 மற்றும் 990 சீரிஸ் பிராசஸர்களின் கீழ் நிலை நிறுத்தப்படுகிறது.புதிய பிராசஸர் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக FHD+ அல்லது 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்கள், 4 ஜிபி ரேம், UFS 2.1 அல்லது eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 சிப்செட் 8 நானோமீட்டர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் அதிவேகமாக இயங்குவதோடு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சிப்செட் ஒரே சமயத்தில் மூன்று கேமரா சென்சார்களையும், தனித்தனியே ஐந்து சென்சார்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.அந்த வகையில் புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் 20 எம்பி டூயல் கேமரா செட்டப் இயக்க வழி செய்யும். இதை கொண்டு 4கே தரத்தில் 30fps வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்.இதுதவிர 5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு வேகமும், 4ஜி எல்டிஇ மோடில் அதிகபட்சம் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை