Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அடுத்த மாதம் புத்தகமாக வெளியாகிறது.

May 30, 2020 301 views Posted By : YarlSri TV
Image

பிரதமர் நரேந்திர மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அடுத்த மாதம் புத்தகமாக வெளியாகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே, அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவர உள்ளது.இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது என ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 1986-ம் ஆண்டிற்கு முந்தையவை ஆகும். பிரதமர் மோடி ஒரு இளைஞனாக ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு கடிதம் எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதில் சந்தோஷங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்துள்ளன.குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதங்களை பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது என தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை