Skip to main content

சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை

May 23, 2020 314 views Posted By : YarlSri TV
Image

சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை 

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் சேதமடைந்தன. சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சூறாவளி காற்றில் சேதம் ஏற்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை