25,000 கைதிகளை விடுவிக்க அதிபர் ஒப்புதல்!
Apr 17, 2020 903 views Posted By : YarlSri TV
25,000 கைதிகளை விடுவிக்க அதிபர் ஒப்புதல்!
மியன்மாரில் புத்தாண்டைெயாட்டி 25,000 கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டிலும் அந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 87 வெளிநாட்டவர்கள் உட்பட 24,896 பேர் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவார்கள் என்று அதிபர் வின் மியுன்ட் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்படும் சிறைக் கைதிகள் செய்த குற்றச் செயல்களைப் பற்றி அவர் தெரிவிக்கவில்லை.
புத்தாண்டில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம் என்றாலும் சாதனை அளவில் கைதிகளை விடுவிப்பது இதுவே முதல்முறை.
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் கிருமி மேலும் பரவாமல் இருக்க அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மியன்மாரில் உள்ள சிறைகளில் ஏறக்குறைய 100,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் 62,000 கைதிகளுக்கு மட்டுமே இடமிருக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில் 25,000 கைதிகளை விடுவிக்க மியன்மார் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
850 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
850 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
850 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
850 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
850 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
850 Days ago