Skip to main content

7.9 லட்சம் பேருக்கு கொரோனா.. உலக அளவிலான பாதிப்பு 22,29,701ஆக உயர்வு!

Apr 18, 2020 334 views Posted By : YarlSri TV
Image

7.9 லட்சம் பேருக்கு கொரோனா.. உலக அளவிலான பாதிப்பு 22,29,701ஆக உயர்வு! 

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்திருந்தது. உலகளவிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.



அமெரிக்காவில் 7.9 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் 32,165 பேருக்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 2535 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.



உலக அளவில் 2,229,701 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதை நேரம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர்.



ஸ்பெயின் நாட்டில் 1 லட்சத்து 90 ஆயிரம், இத்தாலியில் 1 லட்சத்து 72 ஆயிரம், பிரான்சில் 1 லட்சத்து 47 ஆயிரம், ஜெர்மனியில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


Categories:
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை