Skip to main content

கொட்டிதீர்க்கப்போகும் மழை:வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

Jan 20, 2024 34 views Posted By : YarlSri TV
Image

கொட்டிதீர்க்கப்போகும் மழை:வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை! 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சந்தர்ப்பமும் அதேவேளை பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



எச்சரிக்கை

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.



இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை