Skip to main content

கோல்டன் விசா கோல்டன் கடவுச்சீட்டு இரண்டிற்கும் இவ்ளவுதான் வித்தியாசமா..!

Jan 20, 2024 46 views Posted By : YarlSri TV
Image

கோல்டன் விசா கோல்டன் கடவுச்சீட்டு இரண்டிற்கும் இவ்ளவுதான் வித்தியாசமா..! 

கோல்டன் விசா என்பது வெளிநாட்டினர் கணிசமான முதலீடு செய்வதன் மூலம் ஒரு நாட்டில் தற்காலிக காலம் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.



பொதுவாக, கோல்டன் விசாவைப் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாட்டில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.



கோல்டன் விசா 

சில நாடுகளில் கோல்டன் விசாவை வழங்குவதற்கு குறைந்தபட்சம் தங்கியிருக்கும் காலம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதலீடு தேவைப்படுகிறது, இத்தகையை நிலைமைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். 

இதனை பெற்றுக் கொள்வதற்கு 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட தொகையின் முதலீடு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முதலீட்டை முடித்தல், குற்றப் பின்னணி இல்லாதிருத்தல் நல்ல ஆரோக்கியம் என்பன தேவைப்படுகின்றன.



கோல்டன் கடவுச்சீட்டு

கோல்டன் கடவுச்சீட்டு என்பது தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டை வழங்குவது ஆகும்.

கோல்டன் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் பல்வேறு அம்சங்களில் குடிமக்களைப் போலவே ஏறக்குறைய சமமான முறையில் நடத்தப்படுவார்கள்.



அவை, குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்தல், தடைசெய்யப்பட்ட நாட்டிலிருந்து வராமல் இருத்தல் ஆஸ்திரியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற நாடுகள் கோல்டன் கடவுச்சிட்டுகளை ஒரு நிலையான தங்கும் காலத்தை கட்டாயப்படுத்தாமல் வழங்குகின்றன.



மாறாக, கோல்டன் விசாக்கள் பொதுவாக தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கின்றன. இருப்பினும் சில நாடுகள் தற்காலிகமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்தை வழங்குகின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை