Skip to main content

முடிவுக்கு வருகிறதா போர்? நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறும் உக்ரைன்

Mar 08, 2022 80 views Posted By : YarlSri TV
Image

முடிவுக்கு வருகிறதா போர்? நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறும் உக்ரைன் 

உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் தங்களது நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ள போதிலும் நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.



உக்ரைன் மீது ரஷ்யா 12 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி வந்தாலும், மற்றொரு பக்கம் பேச்சு வார்த்தையிலும் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.



இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று பெலாரஸ் - போலாந்து எல்லையில் உள்ள பெலோ வெஸ்கல்யா புஸ்காவில் நடந்தது. இதில் பங்கேற்ற உக்ரைன் பிரதிநிதி கூறுகையில், நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.



அதே சமயம் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றும், தங்கள் நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை எனவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரனின் கார்கிவ், கிவ், மரியாம்போல், சுமி ஆகிய நகரங்கள் வழியாக மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்யா அளித்த சலுகையை உக்ரைன் தரப்பு மறுத்ததாக தெரிகிறது.



ஏனெனில் இந்த பாதுகாப்பு வழிதடங்கள் மக்களை ரஷ்யா அல்லது பெலாரஸுக்கு அழைத்து செல்லும் என்பதால் உக்ரைன் தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 10 ஆம் திகதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை பகுதியான அண்டலியா மாகாணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.



இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை