Skip to main content

காற்று சுழற்சி காரணமாக : இன்றும் மழை பெய்யும் சாத்தியம்!

Jan 10, 2024 33 views Posted By : YarlSri TV
Image

காற்று சுழற்சி காரணமாக : இன்றும் மழை பெய்யும் சாத்தியம்! 

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .



இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது 



இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு அறிவித்துள்ளது .மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

இதேவேளை, நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை