Skip to main content

இந்தியாவுக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு.. 2வது டெஸ்டில் வெல்லுமா?

Jan 04, 2024 32 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவுக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு.. 2வது டெஸ்டில் வெல்லுமா? 

இந்தியாவுக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணி இரண்டாவது டெஸ்டில் நிர்ணயித்துள்ளது.



 இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென்னாபிரிக்க அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது.



இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 55 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களில் சுருண்டது.



இதனை அடுத்து 98 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.



 62 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோர் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. டேவிட் பெட்டிங்கம் 11 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் அபார பந்துவீச்சால் ஆட்டம் இழந்தார்.



ஒரு பக்கம் எய்டன் மார்க்கரம் அபாரமாக நின்று விளையாட எதிர்முனை என்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட தவறினர்.



 பும்ரா ஆக்ரோஷமாக பந்து வீசி தன்னுடைய ஐந்தாவது விக்கெட்டை கைப்பற்றினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்ததால் மறுபுறம் ஏய்டன் மார்க்கரம் 6 பவுண்டரிகள் என அடித்து விளையாட முயற்சி செய்தார். இதன் மூலம் தென்னாபிரிக்காவின் ரன்கள் உயர்ந்தது.



 இதனை அடுத்து 103 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஏய்டன் மார்க்கரம் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் தான் ஆப்பிரிக்கா 176 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை