Skip to main content

2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

Jan 03, 2024 33 views Posted By : YarlSri TV
Image

2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி? 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.



இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.



முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எந்தவித போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியிடம் சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் அடித்த சதம், 2-வது இன்னிங்ஸில் விராட் கோலி சேர்த்த 76 ரன்கள் ஆகியவற்றை தவிர்த்து இந்திய அணியின் பேட்டிங் வரிசையால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் போனது.





ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் டெஸ்ட் வடிவத்துக்கு தகுந்தவாறு சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டுநிலைத்து நின்று விளையாடும் மனப்போக்குடன் செயல்படாதது பலவீனமாக உள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் காணப்படும் கூடுதல் பவுன்ஸ்கள் மற்றும் பந்துகள் தாமதமாக நகர்வதை கணித்து விளையாடும் திறனிலும் இந்திய அணி வீரர்கள் தடுமாறுகின்றனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையை ஆக்கிரமித்த ஷர்துல்தாக்குர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் இருந்து அணிக்கு தேவையான பங்களிப்பு கிடைக்கவில்லை.



இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் பந்து வீச்சு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் அபாரமாக கைகொடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு உறுதுணையாக மற்ற 3 வேகப்பந்து வீச்சாளர்களும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரசித்கிருஷ்ணா எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் ரன்களையும் எளிதாக விட்டுக்கொடுத்தார்.



அவர், ஓவருக்கு சராசரியாக 4.65 ரன்களை வழங்கி ஏமாற்றம் அளித்தார். பெயரளவில் டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டராக இடம்பெறும் ஷர்துல்தாக்குரின் மிதவேகப்பந்து வீச்சும் சாதாரணமாகவே இருந்தது. அவர், ஓவருக்கு சராசரியாக 5.31 ரன்களைவிட்டுக்கொடுத்தார். இவர்களது மோசமான செயல் திறன் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையையும் பலவீனமாக்கியது. போதாதக்குறைக்கு முகமது சிராஜும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறினார்.



முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமானால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறையிலும் இந்திய அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறினாலும் அல்லது ஆட்டத்தை டிரா செய்தாலும் தொடரை இழந்துவிடும். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலிலும் இந்திய அணி பெரியஅளவில் பின்னடைவை சந்திக்கும்.



கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாகாயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் களமிறங்கக்கூடும். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இடத்தை இழக்கக்கூடும். அதேவேளையில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அவேஷ் கான், முகேஷ் குமார் களமிறங்க வாய்ப்பு உள்ளது.



தெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளதால் தென் ஆப்பிரிக்க அணியானது டீன் எல்கர் தலைமையில் களமிறங்குகிறது. 36 வயதான டீன் எல்கர் முதல்டெஸ்ட் போட்டியில் 185 ரன்களைவேட்டையாடியதுடன் பொறுப்புகேப்டனாக சிறப்பாக வழிநடத்திஅணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். கேப்டவுன் டெஸ்ட் போட்டியுடன் டீன் எல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.



எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஸி, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், மார்கோ யான்சன் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், மார்கோ யான்சன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் ஒரு முறை நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். காயம் காரணமாக விலகி உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸிக்கு பதிலாக லுங்கி நிகிடி அல்லது கேசவ் மகாராஜ் களமிறங்கக்கூடும்.



கேப்டவுனும் இந்திய அணியும்.. கேப்டவுன் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. 4 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தது.



ஆடுகளம் எப்படி? கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெப்ப நிலை 33 முதல் 34 டிகிரி உள்ளது. ஆடுகளத்தில் கணிசமான அளவில் புற்கள் உள்ளன. எனினும் இரு முனையிலும் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் உதவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பேட்டிங்கிற்கும் ஆடுகளம் உகந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.



பட்டியலில் 6-வது இடம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 38.89 சராசரி புள்ளிகளுடன் 6-வது தள்ளப்பட்டது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி சராசரி புள்ளிகள் 100-ஐ பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை