Skip to main content

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அவதானம்..!

Jan 03, 2024 26 views Posted By : YarlSri TV
Image

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அவதானம்..! 

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,



“இந்த முறை ஒரு புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சில வலைத்தளங்கள் பழைய அட்டவணையைக் காட்டக்கூடும். பரீட்சாத்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிச்சீட்டிலேயே காட்டியுள்ளோம். அதனால் வேறு எந்த தகவலுக்கும் செல்ல தேவையில்லை. உங்கள் அனுமதிச்சீட்டு கிடைக்கும் போது முன்பதிவு பிரிவு உள்ளது. அந்த பகுதியில் திகதி, பாட எண், மொழி, நீங்கள் விண்ணப்பித்த பாடங்கள் தொடர்பான பாடத்தின் நேரம். உள்ளது. அது போதும். அட்டவணையைப் பற்றி நீங்கள் வேறு எதையும் தேடத் தேவையில்லை…”



பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை