Skip to main content

சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் - அடைக்கலநாதன் எம்.பி

Mar 14, 2024 33 views Posted By : YarlSri TV
Image

சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் - அடைக்கலநாதன் எம்.பி 

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில்  மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,,



இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த  திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர். 



இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில்  வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மக்கள் மீது பொலிஸார் வண்முறையை உபயோகித்துள்ளனர்.குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.என அவர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை