Skip to main content

மரக்கறியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

Feb 15, 2024 36 views Posted By : YarlSri TV
Image

மரக்கறியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி! 

தற்போது  நாட்டில் கடந்த சில மாதங்களாக  பன்மடங்கு அதிகரித்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக குறைவடைந்துள்ளது.



ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும்   விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



அதேவேளை, ஒரு கிலோகிராம் பாகற்காய் 350 முதல் 400 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 300 முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை