Skip to main content

உரிமைகளைப் பறித்தது காங்கிரஸ் - ராஜ்யசபாவில் மோடி பேச்சு

Feb 08, 2024 31 views Posted By : YarlSri TV
Image

உரிமைகளைப் பறித்தது காங்கிரஸ் - ராஜ்யசபாவில் மோடி பேச்சு 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியில், திங்கள்கிழமை, பிப்ரவரி 7-ம் தேதி பதிலளித்துப் பேசினார்.



ஓ.பி.சி-களுக்கு ஒருபோதும் முழுமையான இடஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ், பொதுப் பிரிவினரின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை, பாபா சாகேப் அம்பேத்கரை பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று கருதாத காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்திற்கு மட்டுமே பாரத ரத்னா வழங்கி வருகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.



நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியில், திங்கள்கிழமை, பிப்ரவரி 7-ம் தேதி பதிலளித்துப் பேசினார்.



ராஜ்யசபாவில் புதன்கிழமை பேசிய பிரதமர் மோடி, 70 ஆண்டுகளாக ஓ.பி.சி சமூகத்தின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறித்ததாக குற்றம் சாட்டினார். “ஓ.பி.சி-யினருக்கு ஒருபோதும் முழுமையான இடஒதுக்கீடு வழங்காத காங்கிரஸ், பொதுப் பிரிவினரின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை, பாபா சாகேப் அம்பேத்கரை பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் என்று கருதாத காங்கிரஸ், தனது குடும்பத்திற்கு மட்டுமே பாரத ரத்னா வழங்கி வருகிறது. அவர்கள்தான் இப்போது சமூக நீதிக்கான பாடத்தை போதிக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.



ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் சிந்தனை காலாவதியாகிவிட்டதாகக் கூறி, காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்தார்.



நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான கதைகளை காங்கிரஸ் உருவாக்குவதாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அக்கட்சி இப்போது வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறினார்.



“மாநிலங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலமுறை கலைத்து, பத்திரிகைகளின் சுதந்திரத்தை தடுக்க முயன்ற கட்சி, இப்போது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி பற்றி எங்களுக்கு விரிவுரை அளிக்கிறது” என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைக் குற்றம்சாட்டினார்.



“காங்கிரஸ் ஆட்சியின் போது, நாடு நக்சலிசத்தின் பிரச்சினைகளால் தத்தளித்தது. இந்தியாவின் பெரும் நிலம் எதிரிகளால் பறிக்கப்பட்டது” என்று பிரதமர் மோடி கூறினார். இக்கட்டான காலத்திலிருந்து வெளியே வந்து, நாட்டை அதன் பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளோம் என்று மோடி கூறினார்.



“2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைத் தாண்ட முடியாது என்ற சவால் மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளது. அவர்கள் 40 இடங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த கட்சி (காங்கிரஸ்) காலாவதியான சிந்தனை செயல்முறையைக் கொண்டுள்ளது. இப்போது, அவர்களும் தங்கள் வேலையை அவுட்சோர்ஸ் செய்திருக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் புதன்கிழமை கூறினார்.



ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், பலவீனமான 5 பொருளாதாரங்களில் இந்தியா இருந்தது என்று கூறினார்.



“காங்கிரஸின் 10 ஆண்டுகால வரலாற்றைப் பாருங்கள், பலவீனமான 5 பொருளாதாரங்களில் (இந்தியா) இருந்தது. எனினும், நமது 10 ஆண்டுகளைப் பாருங்கள், முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறோம். பல கடின உழைப்பிற்குப் பிறகு நாட்டை இதிலிருந்து வெளியே கொண்டு வந்தோம்.” என்று மோடி கூறினார்.



ராஜ்யசபாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தை வாசித்தார்.



“....நான் அதன் மொழிபெயர்ப்பைப் படித்து வருகிறேன் -- எந்தவிதமான இட ஒதுக்கீடும், குறிப்பாக சேவைகளில் எனக்குப் பிடிக்கவில்லை. திறமையின்மை மற்றும் இரண்டாம் நிலை தரத்திற்கு வழிவகுக்கும் எதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.." அதனால்தான், அவர்கள் பிறப்பால் அதற்கு (இடஒதுக்கீட்டிற்கு) எதிரானவர்கள் என்று சொல்கிறேன்... அப்போது அரசு ஆட்சேர்ப்பு செய்து, அவ்வப்போது பதவி உயர்வு அளித்திருந்தால், அவர்கள் இன்று இங்கு இருந்திருப்பார்கள்” என்று மோடி கூறினார்.



மேலும், “இன்று நாட்டிற்கு போட்டி, கூட்டுறவு கூட்டாட்சி தேவை” என்று பிரதமர் மோடி கூறினார்.



எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி மக்களுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் சிரமம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  “பாபாசாகேப்பின் சிந்தனைகளை அழிக்க அவர்கள் எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை. அவருக்கு பாரத ரத்னா வழங்க அவர்கள் ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோது பாபாசாகேபுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.” என்று பிரதமர் மோடி கூறினார்.



“தேஷ் கே விகாஸ் கே லியே ராஜ்ய கா விகாஸ்” என்பதே தனது மந்திரம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நாம் அனைவரும் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் மட்டுமே தேசத்தை வளர்க்க முடியும், இதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது. மாநிலம் ஒரு படி நடந்தால், இரண்டு படிகள் முன்னேறும் வலிமையை (நாட்டிற்கு) தருகிறத என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்று மோடி கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை