Skip to main content

கொழும்புத் தமிழ் சங்கத்தில் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பம்

Feb 02, 2022 94 views Posted By : YarlSri TV
Image

கொழும்புத் தமிழ் சங்கத்தில் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பம் 

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.



கோவிட் 19 நோய்த் தாகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இக் கற்கை நெறி, வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் விரைவில் நடைபெறுமெனச் சங்கத்தின் கல்விக்குழு அறிவித்துள்ளது.



2020-2021 கற்கை நெறிக்காக விண்ணப்பித்து கற்கை நெறியில் ஏற்கனவே கற்றுக் கொண்டிருந்த மாணவர்களும், புதிதாகக் கற்க விரும்பும் மாணவர்களும் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.



இலவசமாக நடாத்தப்படும் இக்கற்கை நெறிக்கு ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஆர்வம் உள்ள அனைவரும் விண்ணப்பிக்க முடியுமென கல்விக் குழு தெரிவித்துள்ளது.



2363759 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறவும். அல்லது பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இல-07 சங்கம் மாவத்தை கொழும்பு- 06 என்ற முவகரிக்கு உங்கள் சுய விபரக் கோவையை அனுப்பிவைக்குமாறு கல்விக் குழு கோரியுள்ளது.



நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலம் அடிப்படைத் தகமைகளைப் பெற்ற மாணவர்கள் இக் கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுவர் மொழித்துறைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ் இலக்கிய, இலக்கணத் துறைசார்ந்த வளவாளர்கள் இக்கற்கை நெறியின் விரிவுரையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஒருவருட கற்கையின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் வழங்கப்படும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை