Skip to main content

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு எடுக்கப்பட்ட தீர்மானம்..!

Jan 31, 2024 34 views Posted By : YarlSri TV
Image

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு எடுக்கப்பட்ட தீர்மானம்..! 



வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .



ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும் அரசாங்கம் அறிவிப்பைவிடுத்திருந்தது .



வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது .



 இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானம் எடுக்கப்படுள்ளது 



வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.



குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை