Skip to main content

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடுகள்! – அண்ணாமலை

Nov 02, 2023 35 views Posted By : YarlSri TV
Image

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடுகள்! – அண்ணாமலை  

தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மொத்தமாக முடக்கி, தனியார் பால் நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியாகவே, அமைச்சரின் நடவடிக்கைகள் தெரிகின்றன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,



திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒவ்வொரு துறைகளிலும் முறைகேடுகள் வெளிப்படையாகவே நடக்கின்றன. குறிப்பாக, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பால்வளத் துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாகவே இருந்து வருகிறது.



அளவுக்கதிகமான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக, பால்வளத் துறை அமைச்சராக இருந்த திரு. நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். இவருக்கு அவரே பரவாயில்லை என்ற அளவில் பால்வளத் துறையின் நிலை தற்போது மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.



மலைமுழுங்கி என்று பெயரெடுத்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், பால்வளத் துறையில் இருக்கும் வளத்தை மட்டுமே பார்த்திருக்கிறார். பாலையும், துறையையும் முழுவதுமாகக் கைவிட்டு விட்டார்.



பாலின் கொள்முதல் விலையை உயர்த்தாமல், உற்பத்தியாளர்களை எல்லாம் தனியார் பக்கம் திருப்பி விட்டுவிட்டு, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவைக் குறைத்த அமைச்சர், அடுத்ததாக, பிற மாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு பால் பவுடர் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்யத் தொடங்கினார்.



பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவைக் குறைத்து, தரத்தையும் குறைத்து, பால் பாக்கெட் நிறத்தை மட்டும் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், பொதுமக்கள் மீது விலை உயர்வைச் சுமத்தியிருக்கிறார்.



இதனால், பொதுமக்கள் ஆவின் நிறுவனப் பால் வாங்குவது குறைந்து, தனியார் நிறுவனங்களின் பால் வாங்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மொத்தமாக முடக்கி, தனியார் பால் நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியாகவே, அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் தெரிகின்றன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை