Skip to main content

டொலரின் பெறுமதியில் மாற்றம்

Oct 19, 2023 39 views Posted By : YarlSri TV
Image

டொலரின் பெறுமதியில் மாற்றம் 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (19) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.



அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 29 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 329 ரூபா 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 03 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 401 ரூபா 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 75 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 349 ரூபா 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 12 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 57 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 209 ரூபா 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 97 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241ரூபா 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.



அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.



அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  316.67 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  329.88 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.





கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயிலிருந்து 318.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயிலிருந்து  328.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.



சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319.50 ரூபாயிலிருந்து 320 ரூபாய் மற்றும் 329.50 ரூபாயிலிருந்து 330 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை