Skip to main content

தங்கத்தின் விலையில் மாற்றம்

Oct 12, 2023 26 views Posted By : YarlSri TV
Image

தங்கத்தின் விலையில் மாற்றம் 

உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது அதிகரித்து வருவதால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று எழுச்சி நிலை நிலவுகிறது.



இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 608,737 ரூபாவாக உயர்ந்துள்ளது.



இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.



இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.



அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 157,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.



மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 150,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை