Skip to main content

மன்னாரில் தீ பரவல்

Sep 23, 2023 32 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் தீ பரவல் 

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தாமான காணிக்கு அருகில்  ஏற்பட்ட தீபரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.



இன்று  மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீபரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அணைத்திலும் தீ பரவிய நிலையில் அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.



தொடர்ந்து வீசிய காற்று காரணமாக அருகருகில் இருந்த காடுகளுக்கும் தீ பரவல் அடைந்தது.



இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் கடற்படையின் தொடர் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.



இருப்பினும் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை