Skip to main content

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்!

Oct 13, 2022 76 views Posted By : YarlSri TV
Image

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைகிறது – எரிக் சொல்ஹெய்ம்! 

காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சொல்ஹெய்மிடம் ஆங்கில ஊடகமொன்று மின்னஞ்சலில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.



எவ்வாறாயினும் காலநிலை மாற்றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒரு ஒழுக்கமான நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கும் 'ஒரு மகத்தான வாய்ப்பு' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் அவரது சிறந்த குழுவினருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இலங்கை மிகவும் வளமான அறிவுசார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் மற்ற இந்தியப் பெருங்கடல் நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை