Skip to main content

கதாநாயகி இல்லாத "தி பாய்ஸ்".. வைரலாகும் போஸ்டர்..!

Dec 24, 2023 24 views Posted By : YarlSri TV
Image

கதாநாயகி இல்லாத "தி பாய்ஸ்".. வைரலாகும் போஸ்டர்..! 

ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.



இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.



தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.



'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.



வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.



 



 



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை