Skip to main content

ஜனாதிபதி புலமைப்பரிசிலை பெற்றுகொள்வது எப்படி?

Dec 22, 2023 33 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி புலமைப்பரிசிலை பெற்றுகொள்வது எப்படி? 

க.பொ.த உயர் தரம் கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோருதல்



2022 (2023) ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறை தோற்றி, 2025 ஆம் ஆண்டில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிக் காணப்படும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.



எனவே, கீழ்வரும் தகுதிகளை உடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.



(01) விண்ணப்பதாரியின் குடும்ப மாத வருமானம் 100,000/- ரூபாவினை மேற்படாதிருத்தல்.



(02) அரச பாடசாலை / கட்டணமற்ற தனியார் பாடசாலையில் கற்கும் மாணவராக இருத்தல்.



(03) விண்ணப்பதாரி இறுதியாக நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறையாகத் தோற்றி, 2025 ஆம் ஆண்டில் க.பொ.த உயர் தரம் கற்க முழுமையாக தகுதி பெற்றிருத்தல்.



குறிப்பு:



ஒரு கல்வி வலயத்திற்குக் கிடைக்கும் புலமைப்பரிசில்கள் எண்ணிக்கை 50 ஆகும்.



தேர்ந்தெடுக்கப்படும் புலமைப் பரிசில்தாரர்களுக்கு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சம் 24 மாதங்களுக்கு மாதாந்தம் 6,000.00/- ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.



புலமைப்பரிசில் தொடர்பான பத்திரிகை அறிவித்தல் 03.12.2023 ஆம் திகதிய “சிலுமின, வாரமஞ்சரி மற்றும் சண்டே ஒப்சேவர்” பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 22.12.2023 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், அதிபரிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.



விண்ணப்படிவம்



குறித்த இணைப்பில் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...



👉 https://gkiqmaster.com/wp-content/uploads/2023/12/scholapp_tamil.pdf


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை