Skip to main content

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம்!

Dec 16, 2023 28 views Posted By : YarlSri TV
Image

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம்! 

மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள் உள்பட அனைவருக்கும் ரூ. 6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைசர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 



சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு  கூறியதாவது: சபரிமலைக்கு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



தமிழக அரசின் பணியை ஒன்றிய குழு பாராட்டி விட்டு சென்றுள்ளது. ரூ.6000 நிவாரணம் அறிவித்த முதல்வரை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். மழை பெய்தபோது வசைபாடியவர்கள் கூட தற்போது முதல்வரை வாழ்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பான விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து அதிகாரிகள் ஒன்றிய குழுவிடம் வழங்கி உள்ளனர். 



மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ. 6,000 நிவாரணம் வழங்கபடும் என்று முதலமைச்சர் கணிவுடன் கூறியுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ. 6,000 நிவாரணம் வழங்குவது பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதனால், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு, நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று கூறினார். 



மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால், பலர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களின் குடும்ப அட்டை சொந்த ஊர் முகவரியிலேயே இருக்கும். அதனால், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள் குடும்ப அட்டை இல்லாததால், ரூ. 6,000 நிவாரணம் பெறுவதில் சிக்கல் எழுந்தது.



இந்நிலையில் ,மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், குடும்ப அட்டை இல்லாதோர் என அனைவருக்கும் ரூ.6000 நிவாரண நிதியை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், குடும்ப அட்டை இல்லாதோர் என அனைவருக்கும் ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால், உரிய ஆய்வுக்கு பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. 



இந்நிலையில் இந்த விண்ணப்பத்தில் என்னென்ன கேட்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 1.வார்டு எண்: மண்டலம் எண்: தெரு பெயர்:



மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசும் காற்று.. நாளைக்கு கடலுக்கு போகாதீங்க! மீனவர்களுக்கு எச்சரிக்கை! மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசும் காற்று.. நாளைக்கு கடலுக்கு போகாதீங்க! மீனவர்களுக்கு எச்சரிக்கை!



2.குடும்ப தலைவி/தலைவர் பெயர்



3.கைபேசி எண்



4.ஆதார் எண்



வயதான மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது.. ஆசிரியை வேறயாம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிவயதான மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது.. ஆசிரியை வேறயாம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி



5.வீட்டு முகவரி



6.குடும்ப அட்டை எண்(இருப்பின்),



7.வங்கி கணக்கு விவரம்



வங்கியின் பெயர்:



கிளை:



கணக்கு எண்:



8.பாதிக்கப்பட்ட வீட்டின் வகை



குடிசை/நிரந்தர வீடு/அடுக்குமாடி குடியிருப்பு



9.பாதிப்பின் விவரம்



பகுதியாக பாதிக்கப்பட்டதா?



முழுவதுமாக பாதிக்கப்பட்டதா?



10. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து துணிமணிகள், பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா?



ஆம்/இல்லை



11. தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா?



ஆம்/இல்லை



போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக, மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையானது என்பதை உறுதி செய்ய கையொப்பம் இட வேண்டும் என கேட்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைத்துவிட்டால், அதற்கு சான்றாக ஒப்புகை ரசீதும் வழங்கப்படுகிறது. அதில், இந்த விண்ணப்பத்தை பெற்ற அலுவலரின் கையொப்பம் இருக்கும். இந்த தகவல்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை