Skip to main content

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி!

Dec 15, 2023 23 views Posted By : YarlSri TV
Image

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி! 

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்று பதவியேற்றார். சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அவர், மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை  உடனே வெளியேற வலியுறுத்தினார்.



இந்த நிலையில் இந்தியாவுடனான நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்ற போது கையெழுத்தானது.



இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை, மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததத்தில் இருந்து வெளியேறும் முடிவை மாலத்தீவு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை