Skip to main content

75வது சரே த்தில் காட்சிப்படுத்தப்பட்ட வடக்கின் மனித உ ரிமை மீறல்கள்!

Dec 12, 2023 27 views Posted By : YarlSri TV
Image

75வது சரே த்தில் காட்சிப்படுத்தப்பட்ட வடக்கின் மனித உ ரிமை மீறல்கள்! 

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அரசால் வடக்கில் தி ட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உர ிமை மீறல்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் சம் பவங்களின் சாட்சியங்கள் இன்றைய தினம் திங்கட் கி ழமை யாழ்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள் ளது. 



(11)மன்னார் சமூ க பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனு சரணையில் அதன் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமைய ில் யாழ்பாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக அட ையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.



குறித்த போராட்டத்தின் போதே பொதுமக்களால் பல் வேறு மனித உரிமை மீறல் செயற்பாடுகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது.



குறிப்பக கவனயீர்ப்பு போராட்டத்தில் வலி வடக் கில் இராணுவத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக் கப்பட்டு மக்கள் 33வருடங்களாக இன்னும் அகதி முகா ம்களிளும் உறவினர்கள் வீடுகளிலும் வசிக்கும் அ வலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, அதே நேரம ் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத் தால் கைது செய்யப்பட்டிருக்கும் (PTA) நிலை, மற்றும் மன்னார் மாவட்டத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இடம் பெறும் கனிய மணல் அகழ்வு,காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் மற்றும் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர் பான காட்சிபடுத்தலும் இடம் பெற்றது.



அதே நேரம் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கண ்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அதன் விசாரனைக ளின் காணப்படும் தாமதத்தை வெளிப்படுத்துமுகமா க மனித புதைகுழியும் காட்சிபடுத்தப்பட்டிருந் தது அத்துடன் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு,மற ்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மேச்சல் தரை தொடர்பான பிரச்சினைகளும் காட்சிப்படுத்தப்பட ்டிருந்தன.



அதே நேரம் அரசே காணமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவு கள் எங்கே,மனித புதைகுழி தொடர்பான நீதியான விசா ரணை வேண்டும்,போர் குற்றம் செய்தவர்களை நீதி மு ன் நிறுத்து,பாலியல் குற்றங்களுக்கு அரசே உடனே தண்டனை வழங்கு,வலி வடக்கு மக்களின் காணிகளை உடன ே விடுதலை செய் போன்ற பல்வேறு பதாதைகளையும் போர ாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிபடுத் தியிருந்தனர் .



குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார்,ய ாழ்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்க ளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் ,சமூக ஆ ர்வளர்கள்,பெண்கள் அமைப்பினர்,மீனவ அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க து.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை