Skip to main content

விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் அமைச்சர்! நடந்தது என்ன?

Mar 11, 2023 53 views Posted By : YarlSri TV
Image

விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் அமைச்சர்! நடந்தது என்ன? 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து நேற்று இரவு  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்துகம நீதிமன்றம் பிறப்பித்த வெளிநாட்டுப் பயணத் தடை குறித்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



எனினும், மத்துகம நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக அவ்வாறான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு மஹிந்தானந்த அளுத்கமகே இன்று அறிவித்துள்ளார்.



இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில்,



தரவுப் பதிவுகளில் ஏற்பட்ட பிழையினால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்த கட்டுப்பாட்டாளர் நாயகம், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் குறித்து திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.



இதற்கிடையில், குடிவரவு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளை உரிய விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



முன்னாள் அமைச்சருக்கு இன்று வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.



கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அளுத்கமகேவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், எம்.பி., நீதிமன்றில் கேள்விக்குரிய வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைத்ததை அடுத்து, இந்தத் தடை நீக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை