Skip to main content

இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல்!

Dec 11, 2023 31 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல்! 

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே  கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் இடம்பெற்று வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பல அரபு நாடுகள் செயற்படுகின்றன.



அதேபோல் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் கடற்பகுதி வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



அந்தவகையில் இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது செங்கடல் பகுதியிலுள்ள  பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் அதனை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. 



இந்த டிரோன்கள் ஏமன் நாட்டின் கடற்பகுதியில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டததாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை