Skip to main content

ரெடின் கிங்ஸ்லி - நடிகை சங்கீதாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.

Dec 11, 2023 30 views Posted By : YarlSri TV
Image

ரெடின் கிங்ஸ்லி - நடிகை சங்கீதாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள். 

பல வருட காதல் வெற்றி . சீரியல் நடிகை சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 



ரெடின் கிங்ஸ்லி.நெல்சன் இயக்கிய நயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பிறகு, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்,பீஸ்ட், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.



இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லி, தான் நீண்ட நாள் காதலித்து வந்த தமிழ் சீரியல் நடிகை சங்கீதாவை நேற்று  திருமணம் செய்து கொண்டார். மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் மிகவும் எளிமையாக இத் திருமணம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.



ரெடின் கிங்ஸ்லி - நடிகை சங்கீதா இருவருக்கும் இடையே பலவருடமாக காதல் இருந்து வந்ததாக தெரிய வருகின்றது. 



நடிகை சங்கீதா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை