Skip to main content

25 இந்திய மீனவர்கள் கைது!

Dec 10, 2023 22 views Posted By : YarlSri TV
Image

25 இந்திய மீனவர்கள் கைது! 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 



யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மேலும் இந்திய மீனவர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை