Skip to main content

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி!

Dec 09, 2023 51 views Posted By : YarlSri TV
Image

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி! 

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண (ACC U19) போட்டிகள் இன்று ஐக்கிய அரபு எட்ரேட்ஸில் ஆரம்பமாகியது.



இன்று டுபாயில் ஆரம்பமாகும் 10ஆவது இளையோர் ஆசியக் கிண்ண போட்டியானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வரை நடைபெறும்.



இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.



‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தானும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பானும் இடம் பிடித்துள்ளன.



ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.



லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.



தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் இந்தியா, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.



மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை