Skip to main content

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!

Dec 06, 2023 21 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி! 

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டம், மறுமூலதனமாக்கல், மத்திய வங்கியின் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் இந்தக் கடன் தொகை வழங்கப்படுகிறது.



இதன்படி, உரிய தீர்மானத்தை எட்டுவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



இந்த நிலையில், மேலும் கருத்துரைத்த அமைச்சர் பந்துல குணவர்தன;



“கடன் மறுசீரமைப்பின் போது ​​அனைத்து வைப்பாளர்களின் வைப்புத்தொகையில் ஒரு பகுதியை அரசாங்கம் மீட்டெடுக்கும் எனும் சித்தாந்தத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. அனைத்து மக்களின் வைப்புத்தொகைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உழைத்தது. எதிர்காலத்தில் அதை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு, வைப்புத்தொகைகள் அனைத்தையும் காப்பீடு செய்து ஒரு பாரிய தொகையை மூலதனமாக்குவதற்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை