Skip to main content

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!..

Nov 26, 2023 23 views Posted By : YarlSri TV
Image

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!.. 

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள்.



இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.



மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.



மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். தவிர, 3,500 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதையடுத்து, காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. அந்நகரைச் சேர்ந்த 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா நகர சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.



அதேபோல, முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட சுமார் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி இருப்பதாகவும், ஹமாஸ் தலைமையகம் உட்பட 1,500 தீவிரவாத இலக்குகளை அழித்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.



அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்குக் குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்து அழித்திருக்கிறது. அதேசமயம், இன்னொரு புறம் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டின் உதவியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.



இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதாவது, பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்களுக்கு போர் நிறுத்த செய்ய வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.



இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.



இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையிலிருந்த 25 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனியர்களை அந்நாடு விடுதலை செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, நேற்று 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கின்றனர். இவர்களில் 4 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை