Skip to main content

சங்கரய்யா மரணம்: ராகுல் காந்தி இரங்கல்

Nov 16, 2023 23 views Posted By : YarlSri TV
Image

சங்கரய்யா மரணம்: ராகுல் காந்தி இரங்கல் 

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.



சங்கரய்யா மரணம்: ராகுல் காந்தி இரங்கல்



தமிழ்நாட்டின் தகைசால் தமிழர் விருது பெற்றவரும், மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகியுமான சங்கரய்யா தனது 102ஆவது வயதில் சென்னையில் நேற்று (நவ.15) காலமானார்.



அவரின் இறப்புக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மேற்கொண்ட உறுதியான போராட்டங்களால் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.



 செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்   



உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



மூளைக்கு செல்லும் நரம்பில் வலி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ஒருநாள் போட்டியில் 50 சதங்கள் அடித்து சாதனை... விராட் கோலிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.



புழல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் செந்தில் பாலாஜி 



புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம்



வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்கிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கி.மீ தென்கிழக்கு திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



விதிகளின்படி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது - இந்து அறநிலையத் துறை விளக்கம்



விதிகளின்படியே கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன, உண்டியல் திறப்பை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியம் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.



தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்



தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



டெட்ரா பாக்கெட்களில் மது விற்பனை; நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல்



டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது



பருவமழை பாதிப்பு; மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் முக்கிய உத்தரவு



பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.



பற்களை பிடுங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி



அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது



சங்கரய்யா மரணம்; சரத்குமார் இரங்கல்



சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் மறைவுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்



சங்கரய்யா மறைவு - சீமான் இரங்கல்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை