Skip to main content

இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை....?

Nov 09, 2023 31 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை....? 

இந்தியாவிற்கு தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெளிவிவகாரக் கொள்கை இருக்கக்கூடாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இது குறித்து  மேலும் தெரிவிக்கையில்,



வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியா எதையும் செய்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சீனா செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது. 



 இலங்கையின் பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்தியா தான் உதவியது என்பதை இலங்கை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்  



இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் வெளிவிவகாரக் கொள்கையை அரசு உடனடியாக மாற்ற வேண்டும்.



இந்தியவின் நிதி அமைச்சர் இலங்கை வந்தவுடன் உடனடியாக சீனத்தூதுவர் வடக்குக்குச் சென்று நிவாரணங்களை வழங்குகின்றார். 



வடக்கு - கிழக்குப் பகுதியில் இந்தியா எதனையும் செய்யவிடக்கூடாது என்பதற்காக சீனா இவ்வாறு செயற்படுகின்றதா? அல்லது இந்த நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு சீனா முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.



இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாதான் 4 பில்லியன் டொலரை வழங்கியது. .



இலங்கை,  இந்தியாவுடன் விசுவாசமாக இருக்கவேண்டும், இல்லையேல் சீனாவுடன் விசுவாசமாக இருக்க வேண்டும். அண்மை நாடு எது என்பதிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்  எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை