Skip to main content

சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரனின் கருத்து

Nov 06, 2023 21 views Posted By : YarlSri TV
Image

சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரனின் கருத்து 

பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரிடம்  இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன. இதன்போதே இரா.சம்பந்தன்  தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். 



சுமந்திரன், சம்பந்தன் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை அடுத்து சம்பந்தன் என்னை நேரில் சந்திப்பதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். 



முதலாவது சந்திப்பின்போது, சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் அவர் மனவருத்தத்தினை தெரிவித்ததோடு, அந்த விடயம் சம்பந்தமாக விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.



அத்துடன், குறித்த விடயம் சம்பந்தமாக தீர்மானமொன்றை அவர் எடுப்பார் என்ற தொனிப்படவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த விடயமானது கட்சியின் உள்ளக விவகாரமாக இருப்பதன் காரணமாக, அவ்விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் உரையாடல்களை தவிர்ப்பதோடு, விடயங்களை பூதாகரமாக்குவதை தவிர்ப்பதும் எமது நிலைப்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை