Skip to main content

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு!...

Nov 04, 2023 28 views Posted By : YarlSri TV
Image

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு!... 

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.



இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.



அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.



இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பந்தை பௌண்டரிசாக அடித்து வெளுத்தனர். இதில் 10 வது ஓவர் முடிய டெவோன் கான்வே 6 பௌண்டரிஸுடன் 39 பந்துகளில் 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.



புலி ஆட்டமிழந்த பின்னர் சிங்கம் காலத்தில் இறங்கியது போல டெவோன் கான்வே போனபின்பு கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.



பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என்று வெளுத்துவங்கிய வில்லியம்சன் 35 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 79 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதம் எடுக்க தவறினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை நம் வில்லியம்சன்.



இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 15 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுடன் மொத்தமாக 94 பந்தில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



இவர்களைத் தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மேன் களமிறங்கினர். இருவரும் அணிக்கான தங்களது பங்கை சிறப்பாக அளித்து வந்தனர்.



41 வது ஓவரில் டேரில் மிட்செல் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 18 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



இவரைத் தொடர்ந்து 44 வது ஓவரில் மார்க் சாப்மேன் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 27 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 25 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.



அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 17 பந்துகளில் 26 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரரான டாம் லாதம் 2 பந்துக்களில் ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்களை எடுத்துள்ளது.



பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்களும், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியுள்ளனர் மொத்தமாக 26 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்து தாராள பிரபுவாக திகழ்கின்றனர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்.



இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 402 ரன்கள் இலக்காக உள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை