Skip to main content

கொழும்பில் திடீர் நீர் வெட்டு

Nov 04, 2023 38 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் திடீர் நீர் வெட்டு 





கொழும்பின் பல பகுதிகளில் இன்று (04.11.2023) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.



அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 07.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.



அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் வெட்டு காரணமாக  பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை