Skip to main content

பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி!

Jan 02, 2023 113 views Posted By : YarlSri TV
Image

பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி! 

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்சி காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நொச்சியம், திருவாசி கிராம இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் 12 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்து வருகின்றனர். ஜெயங்கொண்டம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1 லட்சம் முதல் 2லட்சம் வரை விலையில் 4 அல்லது 6 பல் உள்ள காளைகளாக பார்த்து வாங்கி வந்து அவற்றை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்து வருகின்றனர்.



இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் முத்துப்பாண்டி கூறுகையில்:

எங்களிடம் உள்ள மாடுகள் அனைத்தும் நாட்டு மாடுகள் தான். ஜெயங்கொண்டத்தில் இருந்து உம்பளசேரி என்ற வகையும், சிவகங்கையில் இருந்து புலிக்குளம் என்ற வகையும், தேனி மலை மாடுகள் கரும்போர், செம்போர் வண்ணம் உள்ள மாடுகளை வளர்த்து வருகிறோம். 2017க்கு பிறகு தான், ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்று மாடுகளை தயார் செய்ய ஆரம்பித்தோம். பொதுவாக ஜல்லிக்கட்டு களைகளை ஆண்டு முழுவதும் வீட்டு கட்டுத்தரையில் கட்டி வைத்து தீவனம் கொடுத்து பராமரிப்போம்.  



குறிப்பிட்ட அந்த சீசன் வரும்போது மாடுகளே தங்களை சுயமாக தயார் செய்து கொள்ளும். அதற்கு நாங்கள் போதிய தீவனங்களை வழங்குவது மட்டும் தான். கட்டுத்தறியில் நிற்கும்போது சாதுவாக இருக்கும். வாடிவாசலுக்குள் நுழைந்தால் தனது இயல்பான நிலையில் இருந்து மாறிவிடும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு 2 மாதத்திற்கு முன்பே காளைகளை தயார் செய்ய ஆரம்பித்து விடுவோம். நாங்கள் 20 இளைஞர்கள் உள்ளோம்.



அதில் பாதிபேர் கல்லூரி சென்றுவிட்டு வாரத்தில் 2 நாட்கள் வந்து பயிற்சி கொடுப்பார்கள். மற்றவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வேளையிலும், வாரத்தின் இறுதி நாட்களிலும் பயிற்சி அளிப்போம். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்துதல், மரத்திற்கு இடையில் காளைகளை கட்டி அதனை பாய்வதற்கு தயார் செய்தல், நடைபயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறோம் என்றார்.



அலங்காநல்லூர், பாலமேட்டில் பங்கேற்க தயாராகும் அணுகுண்டு, சரவெடி காளைகள்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் செந்தில் என்பவர் கூறுகையில், இரண்டு மாதமும் பருத்திக்கொட்டை, கோதுமை தவுடு,  பாசிமாவு, கருக்கா தவுடு உள்ளிட்டவைகள் வழங்குவோம். ஜல்லிக்கட்டு காளைகள் எங்கள் வீட்டு பிள்ளைகள். அது எந்த ரகத்தை சேர்ந்த  காளைகளாக இருந்தாலும், அவற்றுக்கு நாங்கள்  செல்லப்பெயர்கள் வைத்துள்ளோம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ராஜன், முத்து, கேடி, செவலை ஆகிய பெயர் கொண்ட காளைகள் பிடிபடாமல் பல பரிசுகளை பெற்று தந்தது. இந்தாண்டும் அலங்காநல்லூர், பாலமேடு போட்டிகளில் அணுகுண்டு, சரவெடி காளைகள் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்த 2 காளைகளும் இந்த முறை கார் பரிசாக பெற்று தரும் என்று நம்புகிறோம் என்றார்.



ஜல் ஜல் சலங்கைகள் தயார்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் காளைகளுக்கான சலங்கைகள் தயாரிக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு வளர்ப்பவர்கள் அதிக அளவில் இங்கு ஆர்டர் கொடுக்கின்றனர். டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை சலங்கை தயாரிக்கும் பணி நடைபெறும். இங்கு சலங்கைகள் வெங்கல மணி, பித்தளை மணி மற்றும் சில்வர் ஆகியவற்றால் 4 பல், 6 பல், 8 பல் என்ற அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.



சிறிய கன்றுகளுக்கு ஆறு மணியும், பெரிய மாடுகளுக்கு 12 மணிகள் வரை கோர்க்கப்பட்டு ரூ.1,800 முதல் ரூ.8,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சலங்கை தயாரிப்பாளர் மூர்த்தி கூறும்போது, ‘‘சிங்கம்புணரியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலங்கைகள் தயாரிக்கும் பணியில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புது சலங்கைகள் வாங்கவும், பழைய சலங்கைகளில் உள்ள மணிகளை புதுப்பிக்கவும் இங்கு வருகின்றனர்’’ என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை