Skip to main content

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பதவி விலகல்!

Oct 25, 2022 63 views Posted By : YarlSri TV
Image

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பதவி விலகல்! 

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய சம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பதவியில் இருந்து விலகுவார் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.



அவுஸ்ரேலியாவில் நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே சிம்மன்ஸின் இறுதிப் பணியாகும்.



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இரண்டாவது முறையாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், கடந்த 2016ஆம் ஆண்டு அந்த அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.



பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது அந்த காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, மேம்பட்டிருந்தாலும், ரி-20 போட்டிகளில் ஏமாற்றம் அளித்திருந்தது.



அத்துடன் கிறிஸ் கெய்ல், லெண்டில் சிம்மன்ஸ், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் போன்ற அனுபவமிக்க வீரர்களின் இருப்பு கடந்த ஆண்டு ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பெரிதான தாக்கத்தை வெளிப்படுத்தவில்லை.



ஆகையால் புதுமுக வீரர்களின் வருகையுடன் இம்முறை ரி-20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.



இரண்டு முறை (2012 மற்றும் 2016) ரி-20 உலகக் கிண்ணம் வென்ற ஒரே அணியான மேற்கிந்திய தீவுகள் இந்த முறை முதல் சுற்றில் ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை