Skip to main content

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கியது ஜப்பான்!

Aug 24, 2023 56 views Posted By : YarlSri TV
Image

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கியது ஜப்பான்! 

பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் நடவடிக்கையை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. 



2011-இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திற்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. இதனையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. 



இந்த விபத்திற்கு பிறகு அணு உலைகளில் இருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.



சுத்திகரிக்கப்பட்டுள்ள அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.



எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும்,  அணு உலையில் தேக்கி வைக்கப்பட்ட கதிரியக்க நீரை, சுத்திகரித்து கடலில் வெளியேற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை